உலக உணவு அமைப்பிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது மிகப்பெரிய சாதனை - பிரதமர் மோடி


உலக உணவு அமைப்பிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது மிகப்பெரிய சாதனை - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 16 Oct 2020 1:46 PM IST (Updated: 16 Oct 2020 1:46 PM IST)
t-max-icont-min-icon

உலக உணவு அமைப்பிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது மிகப்பெரிய சாதனை என்று பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

உணவு மற்றும் விவசாய அமைப்பின் 75-வது ஆண்டை குறிக்கும் வகையில் 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். 

75 ரூபாய் நாணயத்தை வெளியிட்ட பின் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

உலக உணவு அமைப்பிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது மிகப்பெரிய சாதனை ஆகும். அந்த அமைப்பிற்கு இந்தியாவின் பங்களிப்புக்காக நாடு மகிழ்ச்சி அடைகிறது. அந்த அமைப்புடன் உறவு வரலாற்று ரீதியிலானது. 

பெண்களுக்கு சரியான திருமண வயது குறித்து விவாதம் நடந்து வருகிறது. இது குறித்து அமைக்கப்பட்ட குழு ஏன் இன்னும் அறிக்கை அளிக்கவில்லை என நாடு முழுவதும் பல பெண்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

அந்த குழு விரைவில் அறிக்கை அளிக்கும். அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களுக்கு உறுதி அளிக்கிறேன். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story