நேபாளத்தின் ஹம்லா மாவட்டத்தில் புதிய கிராமத்தை அமைத்த சீனா; தனது எல்லைப்பகுதி என அடம்


நேபாளத்தின் ஹம்லா மாவட்டத்தில் புதிய கிராமத்தை அமைத்த சீனா; தனது எல்லைப்பகுதி என அடம்
x
தினத்தந்தி 17 Oct 2020 10:33 AM IST (Updated: 17 Oct 2020 10:33 AM IST)
t-max-icont-min-icon

நேபாளத்தின் ஹம்லா மாவட்டத்தில் புதிய கிராமத்தை அமைத்த சீனா புதிதாக கட்டப்பட்ட கிராமம் எங்கள் எல்லைக்குள் வருகிறது என்று கூறுகிறது

புதுடெல்லி: 

நேபாளத்தின் அனுமதி இல்லாமல் அந்நாட்டின் ஹம்லா மாவட்டத்தில் சட்டவிரோதமான கிராமங்களை சீனா கட்டியுள்ளது.

புதிதாக கட்டப்பட்ட கிராமம் திபெத்தின் தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ளது. ஆனால் இது குறித்து நேபாளத்தின் "ஆக்கிரமிக்கப்பட்ட" நிலத்தில் இது கட்டப்படவில்லை என்று சீனாவின் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சீன நில அபகரிப்பு குறித்து பதிலளித்த நேபாளத்தின் எதிர்க்கட்சிகள் ஹம்லா மாவட்டத்திற்கு உணவு வழங்கல் லாரிகளுக்கு சீனா அனுமதியை நிறுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது.

கர்னாலி மாகாணத்தின் எதிர்க்கட்சித் தலைவரான ஜீவன் பகதூர் ஷாஹி, தனது சொந்த மாவட்டமான ஹம்லாவில் சீனாவின் ஆக்கிரமிப்பு காரணமாக இந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

மேலும் அவர் கூறும் போது

"ஜங் தூண் 12 சமீபத்தில் சீனாவால் அமைக்கப்பட்டது. இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து தங்களிடம் ஆலோசிக்கப்படவில்லை என்று அரசாங்க அதிகாரிகள் கூறுகின்றனர். சீன பாதுகாப்புப் படைகள் இருப்பதால் தூண்கள் 5.1 மற்றும் 6.1 ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.

எங்கள் மக்கள் விவசாயத்திற்காக அல்லது கால்நடை வளர்ப்பிற்காக அங்குள்ள பகுதிக்கு செல்லும்போது சீனப் பாதுகாப்பால் துரத்தப்பட்டுள்ளனர் என கூறினார்.

நேபாளம்-சீனா எல்லையில் ஒரு புதிய தூண் அமைக்கப்படும்போதெல்லாம் முதலில் இரு தரப்பு அதிகாரிகளுடனும் ஒருங்கிணைந்து தீர்வு காணப்பட வேண்டும். இருப்பினும், இப்பகுதியை ஆக்கிரமித்து தூணை அமைப்பதன் மூலம் சீனா இந்த கொள்கையை மீறியுள்ளது

பிரதமர் கே.பி. சர்மா ஓலி-அரசு இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்


Next Story