நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 65.24 லட்சம் மீண்டனர்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 62 ஆயிரத்து 211 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
உலக மனித குலத்தை பீடித்திருக்கும் கொரோனா தொற்று 10 மாதங்கள் ஆகியும் விலக மறுக்கிறது. வல்லரசான அமெரிக்கா முதல் ஏழை நாடுகள் வரை அனைத்து நாடுகளும் கொரோனாவால் முடங்கி கிடக்கின்றன. தொற்றுக்கு எதிரான மருந்து இன்னும் வசப்படாததால் இந்த முடக்கம் தொடரவே செய்கிறது.
பிற நாடுகளைப்போலவே இந்தியாவும் இந்த கொடூர வைரசின் பிடியில் சிக்கி இருக்கிறது. இங்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான புதிய பாதிப்புகளும், நூற்றுக்கணக்கான மரணங்களும் கொரோனாவின் கொடூர பார்வையால் கிடைத்து வருகிறது. இதில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டும் குறிப்பிடத்தக்க பலன்கள் கிடைக்கவில்லை.
அந்த வகையில் சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 62 ஆயிரத்து 211 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74,32,680-ஆக அதிகரித்தது. ஒரே நாளில் நேற்று 70,815 பேர் குணமடைந்தனா். இவா்களுடன் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 65,24,595 உயர்ந்துள்ளது. இது, மொத்த பாதிப்பில் 87.78 சதவீதமாகும்.
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு மேலும் 837 போ உயிரிழந்தனா். இதனால் நாடு முழுவதும் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,12,998-ஆக அதிகரித்தது. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு 1.52 சதவீதமாக உள்ளது.
நாடு முழுவதும் 7,95,087 போ சிகிச்சை பெற்று வருகின்றனா். தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் விகிதம் 10.70 சதவீதமாக உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story