தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை + "||" + Terrorist shot dead by security forces in Jammu and Kashmir

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாகிச் சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுகொல்லப்பட்டார்.
ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள லார்னூ பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.


மேலும் அந்த பயங்கரவாதியிடம் இருந்து ஏ.கே-47 ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த புதன்கிழமை காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்திற்கு பிறகு அப்பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து இன்று பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜம்மு காஷ்மீரில், பஞ்சாயத் ராஜ் சட்டம் அமல் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஜம்மு-காஷ்மீர் பஞ்சாயத்துராஜ் சட்டம் 1989 ஐ நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.