அசாமில் மதரசாக்கள் பொது பள்ளிகளாக மாற்றப்படும்; முதல் மந்திரி அறிவிப்பு


அசாமில் மதரசாக்கள் பொது பள்ளிகளாக மாற்றப்படும்; முதல் மந்திரி அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Oct 2020 9:46 AM GMT (Updated: 17 Oct 2020 9:46 AM GMT)

அசாமில் மதரசாக்கள் பொது பள்ளிகளாக மாற்றப்படும் என முதல் மந்திரி பிஸ்வா சர்மா இன்று தெரிவித்து உள்ளார்.

கவுகாத்தி,

அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, அசாமில் வருகிற டிசம்பர் 1ந்தேதி முதல் ஹாஸ்டல்கள் திறக்கப்படும்.  வருகிற நவம்பர் 1ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.

கூட்டம் அதிகம் கூடாமல் இருக்க காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மதியம் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையும் இரு வேளைகளாக பிரித்து பள்ளி கூடங்கள் செயல்படுத்தப்படும்.

பெற்றோர் ஆன்லைன் வகுப்புகளை தேர்ந்தெடுத்து கொண்டால் அதற்கு அனுமதி அளித்துள்ளோம்.  இந்த ஆண்டு வகுப்புகளுக்கு வரவேண்டும் என்று நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை.  அவர்கள் விரும்பினால் வரலாம் என்று கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து, இதேபோன்று மதரசா வாரியம் கலைக்கப்படும்.  மதரசா கல்விக்கும் மற்றும் பொது கல்விக்கும் சம அளவிலான அந்தஸ்து வழங்கப்படும் என்று நாங்கள் வழங்கிய அறிவிப்பினை திரும்ப பெறுவோம்.

அசாமில் நடத்தப்பட்டு வரும் அனைத்து மதரசாக்களும் இனி பொது பள்ளிகளாக நடத்தப்படும்.  இதனால் தனியார் மதரசாக்களை மூடுவது என்ற நோக்கம் அரசுக்கு இல்லை.

நாங்கள் ஒழுங்குமுறையை கொண்டு வருகிறோம்.  மதரசாக்களில் மாணவர்கள் ஏன் படிக்கிறார்கள் என்பது பற்றி தெளிவாக அவர்களிடம் கூற வேண்டும்.  மதரசா பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய படிப்புகளை அவர்கள் அறிமுகப்படுத்த வேண்டும்.

அவர்கள் மாநிலத்தில் பதிவு பெற்றிருக்க வேண்டும்.  அரசியல் சாசன ஆணை மதிக்கப்பட வேண்டும்.  ஆனால், மதரசாக்களின் பண்புநலன்கள் தொடரும் என்று அவர் கூறியுள்ளார்.

Next Story