மராட்டியத்தில் என்கவுண்ட்டர்; 5 நக்சலைட்டுகள் சுட்டு கொலை


மராட்டியத்தில் என்கவுண்ட்டர்; 5 நக்சலைட்டுகள் சுட்டு கொலை
x
தினத்தந்தி 18 Oct 2020 2:39 PM GMT (Updated: 2020-10-18T20:09:01+05:30)

மராட்டியத்தில் பாதுகாப்பு படையினருடனான சண்டையில் 5 நக்சலைட்டுகள் இன்று சுட்டு கொல்லப்பட்டனர்.

கட்சிரோலி,

மராட்டியத்தின் வடகிழக்கில் அமைந்த கட்சிரோலி மாவட்டத்தில் கியாராபட்டி பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது.  இதில், நக்சலைட்டுகளில் 5 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.  படையினர் தரப்பில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story