இமாச்சல பிரதேசத்தில் புதிதாக 170- பேருக்கு கொரோனா
இமாச்சல பிரதேசத்தில் புதிதாக 170- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிம்லா,
இமாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று மேலும் 170- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், இன்று கொரோனா தொற்றில் இருந்து 217- பேர் குணம் அடைந்துள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,967- ஆக உள்ளது.
தொற்று பாதிப்பால் அம்மாநிலத்தில் இதுவரை 263- பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து அம்மாநிலத்தில் இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 16,040- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 2,630- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவல்களை அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story