இந்தியாவில் 75.50 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு: குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 66 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்.
புதுடெல்லி,
இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்று சமீப நாட்களாக குறைய தொடங்கி இருக்கிறது. சுமார் 1 லட்சத்தை தொடும் அளவுக்கு சென்ற தினசரி தொற்று தற்போது 60 ஆயிரத்தை கடந்த நிலையிலேயே தொடர்கிறது.
அதேநேரம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதிதாக பாதிப்புக்கு உள்ளாவோரை விட அதிக எண்ணிக்கையிலானோர் தினமும் குணமடைந்து வருகின்றனர்.
அந்தவகையில் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 66 ஆயிரத்து 399 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 66.6 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 65.97 லட்சத்தில் இருந்து 66.63 லட்சமானது.
மேலும் ஒரே நாளில் 55,722 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 75.50 லட்சத்தை கடந்தது. கொரோனா பாதித்த 7.72 லட்சம் பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 579 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 1.14 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் ஒரே நாளில் 8.59 லட்சம் பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 9.50 கோடி பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.52% குணமடைந்தோர் விகிதம் 88.26% ஆக உள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story