உத்தர பிரதேசத்தில் எம்.எல்.ஏ. மற்றும் மகன் உள்பட 3 பேர் மீது பாடகி பாலியல் பலாத்கார புகார்
நிஷாத் கட்சி எம்.எல்.ஏ. விஜய் மிஷ்ரா, அவரது மகன் உள்பட 3 பேர் மீது பாடகி அளித்த பாலியல் பலாத்கார புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பதோஹி,
உத்தர பிரதேசத்தில் நிஷாத் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் விஜய் மிஷ்ரா. கடந்த 2014ம் ஆண்டு இவரது வீட்டு நிகழ்ச்சி ஒன்றுக்கு வரும்படி பாடகிக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து சென்ற அந்த பாடகியை மிஷ்ரா, அவரது மகன் மற்றும் மற்றொரு நபர் என 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுபற்றி 25 வயது கொண்ட அந்த பாடகி கோபிகஞ்ச் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் 3 பேர் மீதும் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதுபற்றி பதோஹி எஸ்.பி. போலீசார் கூறும்பொழுது, எம்.எல்.ஏ. மிஷ்ரா தனது பிரயாக்ராஜ் இல்லத்தில் வைத்தும், புகார் அளித்த பாடகியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்பு வாரணாசியில் உள்ள ஓட்டல் ஒன்றிலும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
அவர் வீடியோ கால் வழியே பாடகியை அழைத்து, ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளார். அதற்கான சான்றுகளை பாடகி எங்களிடம் அளித்து உள்ளார் என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story