கொரோனா பாதிப்பு எண்ணிக்கை; தமிழ்நாட்டை விட தொடர்ந்து முன்னிலையில் உள்ள கேரளா


கொரோனா பாதிப்பு எண்ணிக்கை; தமிழ்நாட்டை விட தொடர்ந்து முன்னிலையில் உள்ள கேரளா
x
தினத்தந்தி 19 Oct 2020 8:02 PM IST (Updated: 19 Oct 2020 8:02 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்றும் தமிழ்நாட்டை விட அதிகம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் முதல் மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, கேரளாவில் 5,022 பேருக்கு இன்று பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன என்று கூறினார்.  இதனால் கேரளாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.5 லட்சத்திற்கு மேல் சென்றுள்ளது.

கேரளாவில் கொரோனா பாதிப்புகளுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 21 பேர் மரணமடைந்து உள்ளனர்.  இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 200ஐ தொட்டு உள்ளது.  சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 92,731 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

எனினும், தமிழகத்துடன் (3,536) ஒப்பிடும்பொழுது, கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுகிறது.  எனினும் கேரளாவில் 7,469 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.

இந்த எண்ணிக்கையானது (தமிழகத்தில் 4,515 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்) தமிழ்நாட்டை விட அதிக எண்ணிக்கையை கொண்டுள்ளது.  இதுவரை 2.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து சென்றுள்ளனர்.

Next Story