அசாமில் மேலும் 698- பேருக்கு கொரோனா
அசாமில் மேலும் 698- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கவுகாத்தி,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமிலும் கொரோனா தொற்று பாதிப்பு காணப்படுகிறது. அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 698- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து 1 லட்சத்து 73 ஆயிரத்து 210- பேர் குணம் அடைந்த நிலையில், 875- பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அசாமில் தொற்று பாதிப்புடன் 27,319- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவல்களை அசாம் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story