அசாம், ஜார்க்கண்ட் மாநில கொரோனா பாதிப்பு விவரம்


அசாம், ஜார்க்கண்ட் மாநில கொரோனா பாதிப்பு விவரம்
x
தினத்தந்தி 20 Oct 2020 11:40 PM IST (Updated: 20 Oct 2020 11:40 PM IST)
t-max-icont-min-icon

அசாம் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 666- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் இன்று புதிதாக 666- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 02 ஆயிரத்து 073 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், கொரோனா தொற்று பாதிப்பால் அசாமில் இதுவரை 884- பேர் உயிரிழந்துள்ளனர்.  தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்து 1 லட்சத்து 74 ஆயிரத்து 411 பேர் குணம் அடைந்துள்ளனர். 

ஜார்கண்ட் மாநிலத்தில் 542 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பு காரணமாக இன்று 7 பேர் உயிரிழந்த நிலையில், 605- பேர் குணம் அடைந்துள்ளனர்.  ஜார்க்கண்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 97 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 90 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர். 


Next Story