அருணாசல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்


அருணாசல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்
x
தினத்தந்தி 21 Oct 2020 5:48 AM IST (Updated: 21 Oct 2020 5:48 AM IST)
t-max-icont-min-icon

அருணாசல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது.

இடாநகர், 

அருணாசல பிரதேசத்தில் உள்ள சாங்லாங் என்ற பகுதியில் இன்று அதிகாலை 1.25 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

 நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. கடந்த சில தினங்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story