கங்கனா ரனாவத், அவரது சகோதரிக்கு மும்பை போலீசார் சம்மன் விடுத்துள்ளதாக தகவல்


கங்கனா ரனாவத், அவரது சகோதரிக்கு மும்பை போலீசார் சம்மன் விடுத்துள்ளதாக தகவல்
x
தினத்தந்தி 21 Oct 2020 5:37 PM GMT (Updated: 21 Oct 2020 5:37 PM GMT)

மும்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசியதால் கங்கனா ரனாவத்திற்கும் சிவசேனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மும்பை,

சுஷாந்த் சிங் ராஜ்புட் மற்றும் போதைபொருள் விவகாரம்  தொடர்பாக மும்பையை ஆக்கிரமிப்பு காஷ்மீர் உடன் ஒப்பிட்டு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதனால் கங்கனா ரனாவத்துக்கும் மராட்டிய அரசுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. கங்கனா ரனாவத் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய அரசு பாதுகாப்பு அளித்தது. மும்பையில் தங்கியிருந்த கங்கனா ரனாவத் கவர்னரை சந்தித்தார். பின்னர் மும்பையில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில்  கங்கனா ரனாவத்திற்கும் அவரது சகோதரிக்கும்  மும்பை போலீசார், விசாரணைக்கு  ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  வருகிற 26-ந்தேதி மற்றும் 27-ந்தேதிகளில் மும்பை போலீஸ் முன் ஆஜராக சம்மன் அனுப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

 மும்பை கோர்ட்டின் உத்தரவுப்படி கங்கனா ரனாவத் மீது போலீசார்  கடந்த வாரம்  எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர். வகுப்புவாத பிரிவினையை உண்டாக்கும் வகையில் டுவிட்டரில் கருத்து தெரிவித்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் தேவைப்பட்டால் வழக்கு தொடரலாம் என மும்பை மாஜிஸ்திரேட்டு  கோர்ட் தெரிவித்திருந்தது. 

Next Story