டோர்னியர் விமானங்களில் பறந்து கடலில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள 3 பெண் விமானிகள்

டோர்னியர் விமானங்களில் பறந்து கடலில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள 3 பெண் விமானிகள்
x
தினத்தந்தி 23 Oct 2020 9:40 AM IST (Updated: 23 Oct 2020 9:40 AM IST)
t-max-icont-min-icon

டோர்னியர் விமானங்களில் பறந்து கடலில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, இந்திய கடற்படையில் முதல் முறையாக 3 பெண் விமானிகள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

கொச்சி

டோர்னியர் விமானங்களில் பறந்து கடலில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, இந்திய கடற்படையில் முதல் முறையாக 3 பெண் விமானிகள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

கொச்சியில் தெற்கு கடற்படை கட்டளை (எஸ்.என்.சி) மூலம் டோர்னியர் விமானத்தின் விமானிகளாக அமர்த்தபட்டு உள்ளனர். 

கடற்படையைச் சேர்ந்த லெப்டினன்ட் சிவாங்கி, சுபாங்கி ஸ்வரூஒமற்றும் திவ்யா சர்மா ஆகியோர் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவிற்கு டோர்னியர் விமானங்களை இயக்க சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

சிவாங்கி பீகாரை சேர்ந்தவர், சுபாங்கி ஸ்வரூப் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் திவ்யா சர்மா டெல்லியை சேர்ந்தவர் ஆவார்கள்.

ஐ.என்.எஸ் கருடாவில் நேற்று நடைபெற்ற விழாவில் 6 பேருக்கு பட்டம் வ்ழங்கப்பட்டது இதில் இந்த  3 பெண் விமானிகளும் அடங்குவர்.

 9 மாத பயிற்சிகளுக்குப் பிறகு டோர்னியர் விமானத்தில், அனைத்துவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு அவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்கள் விரைவில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story