மத்திய மந்திரி ஸ்ரீபாத நாயக் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தார்


மத்திய மந்திரி ஸ்ரீபாத நாயக் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தார்
x
தினத்தந்தி 23 Oct 2020 7:24 PM GMT (Updated: 2020-10-24T00:54:24+05:30)

நீண்ட கால சிகிச்சைக்கு பின்பு மத்திய மந்திரி கொரோனாவில் இருந்து குணம் அடைந்தார்.

பனாஜி, 

ஆயுஷ் துறையின் மத்திய மந்திரியாக இருப்பவர் ஸ்ரீபாத நாயக். இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கோவாவில் தனது வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்தவாறு பணிகளை கவனித்து வந்தார். அப்போது அவருக்கு மருத்துவர் குழு சிகிச்சையும் அளித்தது.

தற்போது அவர் கொரோனாவில் இருந்து முழுவதும் மீண்டுவிட்டார். எனவே அடுத்த வாரம் அவர் டெல்லி அலுவலகத்துக்கு திரும்பி தனது பணியைத் தொடர உள்ளார். வரும் 26-ந் தேதி பணிக்கு திரும்புவதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

Next Story