கொரோனா தொற்று; டெல்லியில் 34 நாட்களில் இல்லாத அளவுக்கு அதிக பாதிப்பு


கொரோனா தொற்று; டெல்லியில் 34 நாட்களில் இல்லாத அளவுக்கு அதிக பாதிப்பு
x
தினத்தந்தி 24 Oct 2020 4:32 AM IST (Updated: 24 Oct 2020 4:32 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் 34 நாட்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிக எண்ணிக்கையில் பதிவாகி உள்ளன.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து உலக அளவில் இந்தியா 2வது இடம் பிடித்து உள்ளது.  எனினும், சமீப நாட்களாக இந்த பாதிப்புகளின் விகிதம் குறைந்து வருகிறது.  எனினும் தலைநகர் டெல்லியில் புதிய உச்சம் அடைந்து வருகிறது.  இதனால், கொரோனா பாதிப்புகள் 4 ஆயிரம் எண்ணிக்கைக்கு மேல் பதிவாகி உள்ளது.

டெல்லியில் நேற்று 4,086 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டன.  இது கடந்த 34 நாட்களில் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கை ஆகும்.

இந்த புதிய பாதிப்புகள் 58,568 மாதிரிகளில் நடத்தப்பட்ட பரிசோதனை முடிவில் இருந்து தெரிய வந்துள்ளன.  இதனால், டெல்லியில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.48 லட்சம் ஆக உயர்ந்து உள்ளது.  நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் சூழலில் தலைநகரில் புதிய உச்சம் அடைந்து இருப்பது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Next Story