தேசிய செய்திகள்

ஆயுத பூஜை: போர் தளவாடங்களுக்கு பூஜை செய்த ராஜ்நாத் சிங் ! + "||" + Rajnath Singh Performs "Shastra Puja"

ஆயுத பூஜை: போர் தளவாடங்களுக்கு பூஜை செய்த ராஜ்நாத் சிங் !

ஆயுத பூஜை: போர் தளவாடங்களுக்கு பூஜை செய்த ராஜ்நாத் சிங் !
சீனாவுடனான பதற்றம் முடிவுக்கு வர வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறினார்.
டார்ஜிலிங்,

நவராத்திரி பண்டிகையின் 9-ஆம் நாளான  இன்று சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் வாகனங்களையும், தொழில் கருவிகளையும் சுத்தம் செய்து பூஜை செய்கின்றனர். . 

அந்த வகையில் பாதுகாப்புத்துறை மந்திரி  ராஜ்நாத்சிங் போர் தளவாடங்களுக்கு இன்று  பூஜை செய்தார். டார்ஜிலிங்கில் உள்ள சுக்னா போர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை  செலுத்திய பின், தளவாடங்களுக்கு ராஜ்நாத்சிங் ஆயுத பூஜை செய்தார். 

அதன்பின்னர் பேசிய ராஜ்நாத் சிங், ‘இந்திய-சீனா எல்லை பதற்றம் முடிவுக்கு வர வேண்டும், அமைதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. அதேசமயம் நமது நிலத்தில் ஒரு அங்குலம் கூட யாரையும் எடுக்க நமது ராணுவம் அனுமதிக்காது’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் மதுக்கடைகள் மூடப்படும் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் உறுதி
தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் மதுக்கடைகள் மூடப்படும் என்று மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் கூறினார்.
2. நீதி மற்றும் மனிதாபிமானத்தின் அடிப்படையில் ஆட்சி நடத்துவோம் - மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் பேச்சு
ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் நாங்கள் ஆட்சி நடத்தமாட்டோம் என மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
3. 2 நாள் பயணமாக நாளை டார்ஜிலிங்,சிக்கிம் செல்கிறார் - ராஜ்நாத்சிங்
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் 2 நாள் பயணமாக நாளை டார்ஜிலிங் செல்கிறார்.