தேசிய செய்திகள்

பண்டிகைகளை கொண்டாடும் போது வெகு கவனத்தோடு செயல்பட வேண்டும்- பிரதமர் மோடி + "||" + In Mann ki Baat address, PM Modi puts spotlight on importance of humour in trying times

பண்டிகைகளை கொண்டாடும் போது வெகு கவனத்தோடு செயல்பட வேண்டும்- பிரதமர் மோடி

பண்டிகைகளை கொண்டாடும் போது வெகு கவனத்தோடு செயல்பட வேண்டும்- பிரதமர் மோடி
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாற்றி வருகிறார்.
புதுடெல்லி,

கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி,  மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ காலை 11 மணிக்கு ஒலிபரப்பானது. மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறுகையில், “விஜயதசமி திருநாளில் அனைவருக்கும் எனது மன மார்ந்த வாழ்த்துக்கள். பண்டிகைகளை கொண்டாடும் போது வெகு கவனத்தோடு செயல்பட வேண்டும். கொரோனா காலத்திலும் காதி துணிகளின் விற்பனை அதிகரித்துள்ளது. சந்தைகளில் பொருட்களை வாங்கும் போது உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். 

எல்லையில் நம்மை பாதுகாக்கும் வீரர்களை நாம் நினைவுகூர வேண்டும். பண்டிகை காலத்தில் வீட்டில் விளக்குகளை அவர்களுக்காக ஏற்ற வேண்டும். அக்.31 ஆம் தேதி  நமது முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அவருக்கு நாம் மரியாதை செலுத்துவோம்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. இந்திய குடியரசு தின கொண்டாட்டம்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக அழைப்பு
குடியரசு தின கொண்டாட்டங்களுக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சிறப்பு விருந்தினராக இந்தியா அழைப்பு விடுத்து உள்ளது.
2. டிசம்பர் 15-ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் தலா 1 மருத்துவர், 1 செவிலியர் மற்றும் 1 உதவியாளர் கொண்ட 2000 மினி கிளினிக்குகள் -முதல்வர் பழனிசாமி
டிசம்பர் 15-ம் தேதிக்குள் தமிழகம் முழுவதும் தலா 1 மருத்துவர், 1 செவிலியர் மற்றும் 1 உதவியாளர் கொண்ட 2000 மினி கிளினிக்குகள் தொடங்கப்ப்டும் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
3. புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி டிசம்பரில் அடிக்கல் நாட்டுகிறார்
புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி வரும் டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
4. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் அவசியம்: பிரதமர் மோடி
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியமானது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
5. பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி காணொலி மூலம் இன்று நடைபெறுகிறது.