ஒரு ஆட்சியாளரின் வாழ்க்கையில் ஆணவம், பொய்மை, வாக்குறுதிகளை மீறுவதற்கு இடமில்லை - சோனியாகாந்தி தசரா வாழ்த்து


ஒரு ஆட்சியாளரின் வாழ்க்கையில் ஆணவம், பொய்மை, வாக்குறுதிகளை மீறுவதற்கு இடமில்லை - சோனியாகாந்தி தசரா வாழ்த்து
x
தினத்தந்தி 25 Oct 2020 9:14 PM IST (Updated: 25 Oct 2020 9:14 PM IST)
t-max-icont-min-icon

ஒரு ஆட்சியாளரின் வாழ்க்கையில் ஆணவம், பொய்மை மற்றும் வாக்குறுதிகளை மீறுவதற்கு இடமில்லை என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

புதுடெல்லி,

கடந்த வாரம் தொடங்கிய தசரா நிகழ்வுகள் நாளை விஜயதசமி (26-ம் தேதி) பண்டிகையோடு நிறைவடைகின்றன. இந்நிலையில் தசரா குறித்த தனது வாழ்த்துச் செய்தியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறியதாவது:-

தசரா ஒன்பது நாள் வழிபாட்டிற்கு பிறகு, அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றியின் சின்னமாக, பொய்மைக்கு எதிரான உண்மையாக மற்றும் ஆணவத்தை வெற்றிகொள்ளும் விவேகத்துடன், எந்தவொரு சூழ்நிலையிலும் கடமைகளை நிறைவேற்றுவதற்கான ஒரு புதிய தீர்மானத்தையும் சபதத்தையும் கொண்டு வருகிறது.

ஆட்சியில் மக்களே முக்கியமானவர்கள், ஒரு ஆட்சியாளரின் வாழ்க்கையில் ஆணவம், பொய்மையோடு நடப்பதற்கும் வாக்குறுதிகளை மீறுவதற்கும் இடமில்லை. இது தான் விஜய தசாமியின் மிகப்பெரிய செய்தி.

இந்த தசரா, அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் வளங்கள் ஆகியவற்றை மட்டும் கொண்டுவரவில்லை, அவற்றிற்கும் மேலாக மக்களிடையே நல்லிணக்கத்தையும் கலாச்சார நிகழ்வுகள் வலுப்படுத்தும் ஒரு நிகழ்வு என்றே நான் நம்புகிறேன்.

பண்டிகைகளின் போது கொரோனா வைரஸிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், அனைத்து கோவிட் -19 வழிகாட்டுதல்களையும் பின்பற்றவும் வேண்டும் என மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story