இந்தியாவில் 3 மாதங்களுக்கு பின் 500க்கு கீழ் குறைந்த கொரோனா உயிரிழப்பு


இந்தியாவில் 3 மாதங்களுக்கு பின் 500க்கு கீழ் குறைந்த கொரோனா உயிரிழப்பு
x
தினத்தந்தி 26 Oct 2020 10:12 PM GMT (Updated: 26 Oct 2020 10:12 PM GMT)

இந்தியாவில் 3 மாதங்களுக்கு பின் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 500க்கு கீழ் குறைந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், இன்று 45,148 புதிய பாதிப்புகள் பதிவாகி இருந்தன.  இதனால், நாட்டில் கொரோனா பாதிப்புகள் 79 லட்சம் கடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை நாளொன்றுக்கு 480 ஆக பதிவாகி உள்ளது.  கடந்த 3 மாதங்களுக்கு பின் எண்ணிக்கை 500க்கு கீழ் குறைந்துள்ளது.

கடந்த ஜூலை 10ந்தேதி நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 475 ஆக இருந்தது.  இதன்பின்னர் ஆகஸ்டில் உயர்ந்து சராசரியாக 900 முதல் ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர்.

இதன்பின்னர் இந்த எண்ணிக்கை செப்டம்பரில் உச்சமடைந்தது.  நாளொன்றுக்கு சராசரியாக 1,100 பேர் உயிரிழந்தனர்.  இதேபோன்று செப்டம்பரில் ஒரு நாளைக்கு சராசரியாக 90 ஆயிரம் புதிய பாதிப்புகள் பதிவாகின.

ஆனால் அக்டோபரில் கொரோனா பாதிப்புகள் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை சீரான சரிவை சந்தித்துள்ளது.  கடந்த வாரம் நாட்டில் ஆயிரத்திற்கும் குறைவான உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகி உள்ளது.  அதிலும், 1,100 ஆக கடந்த 2ந்தேதி இருந்த எண்ணிக்கை தொடர்ந்து குறைந்த அளவிலேயே உள்ளது.

இதனால், இந்தியாவில் 3 மாதங்களுக்கு பின் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 500க்கு கீழ் குறைந்துள்ளது.

Next Story