தேசிய செய்திகள்

இந்தியாவில் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு: புதிதாக 36,469 பேருக்கு தொற்று உறுதி + "||" + With 36,469 new #COVID19 infections, India's total cases surge to 79,46,429. With 488 new deaths, toll mounts to 1,19,502.

இந்தியாவில் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு: புதிதாக 36,469 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் குறைய தொடங்கிய கொரோனா பாதிப்பு: புதிதாக 36,469 பேருக்கு தொற்று உறுதி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் இன்று புதிதாக 36,469 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79,46,429 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 488 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,19,502 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 63,842 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 72,01,070 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 6,25,857 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 10 கோடியே 44 லட்சத்து 20 ஆயிரத்து 894 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒருநாளில் மட்டும் 9,58,116 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி: இந்திய அணி பேட்டிங் தேர்வு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியின் ஆடும் லெவனில் தமிழக வீரர் நடராஜன் இடம் பிடித்துள்ளார்.
2. கேரளாவில் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 5,375 பேருக்கு தொற்று உறுதி
கேரளாவில் இன்று மேலும் 5,375 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.39 கோடியாக உயர்ந்துள்ளது.
4. டெல்லியில் தொடரும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 3,726 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 3,726 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
5. கர்நாடகாவில் ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
கர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.