சத்தம் போட்டு பாட்டு கேட்டதற்கு எதிர்ப்பு: வாலிபர் குத்தி கொலை; 2 சகோதரர்கள் படுகாயம் + "||" + Protest against loud singing: Young man stabbed to death; 2 brothers were injured
சத்தம் போட்டு பாட்டு கேட்டதற்கு எதிர்ப்பு: வாலிபர் குத்தி கொலை; 2 சகோதரர்கள் படுகாயம்
டெல்லியில் சத்தம் போட்டு பாட்டு கேட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த வாலிபர் குத்தி கொல்லப்பட்டார்.
புதுடெல்லி,
டெல்லியின் வடமேற்கே மகேந்திரா பார்க் பகுதியில் சராய் பிப்பல் தலா என்ற பகுதியில் வசித்து வந்தவர் சுஷில் (வயது 29). அந்த பகுதியில் வசிக்கும் அப்துல் சத்தார் என்ற பூண்டு வியாபாரி தனது வீட்டில் சத்தமுடன் பாட்டு போட்டு கேட்டுள்ளார்.
இதுபற்றி பேச சென்ற சுஷிலுக்கும், அப்துல் மற்றும் அவரது 4 மகன்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சுஷில் கத்தியால் குத்தப்பட்டார். அவரது இரு சகோதரர்களான சுனில் மற்றும் அனில் ஆகியோரும் பலத்த காயமடைந்தனர்.
இதில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் சுஷில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். அனில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தில் அப்துல் அவரது 2 மகன்களான ஷாநவாஸ் மற்றும் ஆபாக் கைது செய்யப்பட்டனர். தப்பியோடிய சந்த் மற்றும் ஹசீன் ஆகிய 2 மகன்களை போலீசார் தேடி வருகின்றனர்.