நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: சிவசேனா


நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: சிவசேனா
x
தினத்தந்தி 28 Oct 2020 12:34 PM IST (Updated: 28 Oct 2020 12:34 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் தேசியக்கொடி ஏற்றுவதை யாரேனும் தடுக்க முயற்சித்தால் அது ராஜ துரோகத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை என சிவசேனா தெரிவித்துள்ளது.

மும்பை, 

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்செய் ராவத் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: - சீனாவின் உதவியுடன் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் அமல்படுத்த மெகபூபா முப்தி, பரூக் அப்துல்லா ஆகியோர் முயற்சித்தால் மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். காஷ்மீரில் தேசியக்கொடி ஏற்றுவதை யாரேனும் தடுக்க முயற்சித்தால் அது ராஜ துரோகத்தை தவிர வேறு ஒன்றும் இல்லை. 

நாங்கள் முன்பே கூறியது போல, நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு அத்தகைய முடிவுகள் எதையும் எடுத்தால் நாங்கள் எங்கள் முடிவை அப்போது எடுப்போம்” என்றார்.  

மராட்டியத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. சமீப காலமாக தனது பழைய கூட்டணி கட்சியான பாஜகவையும் மத்திய அரசையும் பல்வேறு விவகாரங்களில் சிவசேனா கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், சிவசேனா  மூத்த தலைவர் சஞ்செய் ராவத் மேற்கூறியவாறு பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

Next Story