இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய 48648 கொரோனா பாதிப்புகள்; மொத்த பாதிப்பு 80,88,851


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய 48648 கொரோனா பாதிப்புகள்; மொத்த பாதிப்பு 80,88,851
x
தினத்தந்தி 30 Oct 2020 11:56 AM IST (Updated: 30 Oct 2020 11:56 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48648 கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யபட்டு உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 80,88,851 ஆக உயர்ந்து உள்ளது.

புதுடெல்லி

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 48,648 புதிய கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணைக்கை 80,88,851 ஆக உயர்ந்துள்ளன, அதே நேரத்தில் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணைக்கை  6,00,000 க்கும் குறைந்துவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன

தேசிய மீட்பு விகிதம் 91 சதவீதத்தை தாண்டியது. இன்று காலை அறிவிக்கபட்ட 563 புதிய இறப்புகளுடன் நாட்டில் கொரோனா பாதிப்பு இறப்பு எண்ணிக்கை 1,21,090 ஆக உயர்ந்து உள்ளது 

கொரோனாவில் இருந்து மொத்தம் 73,73,375 பேர் மீண்டு வீடு திரும்பி உள்ளனர், இது தேசிய மீட்பு வீதத்தை 91.15 சதவீதமாக உயர்த்தியுள்ளது, அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.50 சதவீதமாக உள்ளது.

நாட்டில் 5,94,386 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த கேசலோடில் 7.35 சதவீதத்தை உள்ளடக்கியது என்று தரவு தெரிவிக்கிறது.

இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதி 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23 அன்று 30 லட்சத்தையும், செப்டம்பர் 5 ஆம் தேதி 40 லட்சத்தையும் தாண்டியது. இது செப்டம்பர் 16 அன்று 50 லட்சத்தையும், செப்டம்பர் 11 அன்று 60 லட்சத்தையும், அக்டோபர் 11 அன்று 60 லட்சத்தையும் தாண்டியது. அக்டோபர் 29 அன்று 80 லட்சத்தை தாண்டியது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி அக்டோபர் 29 வரை மொத்தம் 10,77,28,088 கொரோனா மாதிரிகள் பரி சோதனை செய்யப்பட்டுள்ளன, நேற்றுமட்டும்  11,64,648 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

Next Story