மிகக்குறைந்த அளவு மருத்துவக் கட்டணம் வசூலிக்கப்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் - மத்திய சுகாதாரத்துறை தகவல்
இந்தியாவில் மிகக்குறைந்த அளவு மருத்துவக் கட்டணம் வசூலிக்கப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருப்பது மத்திய அரசு ஆய்வில் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தொடர்பான புதிய புள்ளி விவரங்களை ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் வசூலிக்கப்படும் கட்டண விவரங்கள் அந்த புள்ளி விவரத்தில் இடம் பெற்றுள்ளன.
அதன்படி நாட்டிலேயே தமிழகத்தில் தான் மிகக் குறைந்த அளவு மருத்துவக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சாதாரண சிகிச்சைக்கு சராசரியாக ரூ.433 முதல் ரூ.520 வரை செலவாகிறது என்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற ரூ.28,412 முதல் ரூ.41,566 வரை செலவாகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் 56% பேர் அரசு மருத்துவமனைகளிலும், 41% பேர் தனியார் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகிறார்கள் என்றும் நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் 42% பேர் அரசு மருத்துவமனைகளிலும், 54% பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகிறார்கள் என்றும் அந்த புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் அதிக படுக்கை வசதி கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 2வது இடத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story