கேரளாவில் மேலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா


கேரளாவில் மேலும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா
x
தினத்தந்தி 30 Oct 2020 1:06 PM GMT (Updated: 30 Oct 2020 1:06 PM GMT)

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அந்த மாநிலத்தில் 6,638  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 7,928 பேர் குணம் அடைந்துள்ளனர்.  

மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் 90 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கேரளாவில்  கொரோனா தொற்று பாதிப்பால் இதுவரை 1,457  பேர் உயிரிழந்துள்ளனர்.  அதிகபட்சமாக திரிசூர் மாவட்டத்தில் 1096  பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

Next Story