இந்தியாவில் இன்று புதிதாக 48,268 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
இந்தியாவில் இன்று புதிதாக மேலும் 48,268 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 48,268 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புகள் உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணைக்கை 81,37,119 ஆக உயர்ந்துள்ளன, அதே நேரத்தில் சிகிச்சையில் இருப்பவர்கள் எண்ணைக்கை 6 லட்சத்திற்கும் கீழ் குறைந்துவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேசிய மீட்பு விகிதம் 91 சதவீதத்தை தாண்டியது. இன்று காலை அறிவிக்கபட்ட 551 புதிய இறப்புகளுடன், நாட்டில் கொரோனா பாதிப்பு இறப்பு எண்ணிக்கை 1,21,641 ஆக உயர்ந்து உள்ளது
கொரோனாவில் இருந்து மொத்தம் 74,32,829 பேர் மீண்டு வீடு திரும்பி உள்ளனர், அதில் கடந்த 24 மணி நேரத்தில் 59,454 பேர் குணமடைந்துள்ளனர். இது தேசிய மீட்பு வீதத்தை 91.34 சதவீதமாக உயர்த்தியுள்ளது, அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.50 சதவீதமாக உள்ளது. நாட்டில் தற்போது 5,82,649 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நேற்று வரை மொத்தம் 10,87,96,064 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று மட்டும் 10,67,976 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story