ஒடிசாவில் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் வரும் நவம்பர் 30ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; அரசு அறிவிப்பு


ஒடிசாவில் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் வரும் நவம்பர் 30ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு; அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 31 Oct 2020 12:20 PM IST (Updated: 31 Oct 2020 12:20 PM IST)
t-max-icont-min-icon

ஒடிசாவில் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் வரும் நவம்பர் 30ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

புவனேஸ்வர்,

ஒடிசாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 2,90,116 ஆக உள்ளது.  இவற்றில் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,73,838 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14,905 ஆகவும் உள்ளது.  இதுவரை 1,320 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர் என ஒடிசா சுகாதார துறை தெரிவித்து உள்ளது.

ஒடிசாவில் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் வருகிற நவம்பர் 30ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.  இதனை முன்னிட்டு அனைத்து கல்வி நிலையங்களும் வருகிற நவம்பர் 30ந்தேதி வரை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும் என அரசு அறிவித்து உள்ளது.

இதேபோன்று 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான வகுப்புகள், பள்ளி கூடங்களின் மேற்பார்வையின் கீழ் வருகிற நவம்பர் 16ந்தேதி முதல் நடத்தப்படும் என்றும் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து உள்ளது.

Next Story