தேசிய செய்திகள்

தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த ரூ.2,200 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சகம் + "||" + Govt releases Rs 2,200 crore to 15 states towards measures for air quality improvement

தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த ரூ.2,200 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சகம்

தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த ரூ.2,200 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சகம்
தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்த ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் காற்று மாசுபாடு என்பது மிகப் பெரிய சூழல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. காற்று மாசுபாட்டால் ஆண்டிற்கு பல லட்சத்திற்கு மேற்பட்ட நபர்கள் உயிரிழக்கின்றனர். குறிப்பாக டெல்லி, அரியானா, உத்தரப பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் காற்று மாசுபாடு கடுமையாக பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நம் நாட்டின் தலைநகரமான டெல்லி காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. பெருகி வரும் வாகனங்கள் எண்ணிக்கை, தொழிற்சாலைகள் வெளியிடும் புகை, மாநில எல்லை பகுதிகளில் குப்பைகள் எரிக்கப்படுவது போன்ற காரணங்களால் டெல்லியில் காற்று மாசு அடைகிறது. சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் டெல்லிவாசிகள் தவித்து வருகின்றனர்.

டெல்லிக்கு தான் அந்த நிலைமை என்றால் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களிலும் காற்றின் தரம் மோசமாகி வருகிறது. மத்திய அரசு காற்று மாசுவை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிப்பதால் காற்று அதிகம் மாசு அடையும் என்பதால் பாரம்பரிய வெடிகளை விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. 

இந்நிலையில், காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்களுக்கு 15-வது நிதிக்குழு பரிந்துரைப்படி மொத்தமாக ரூ.2,200 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. 2020-21ம் ஆண்டிற்கான முதல் தவணையாக 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகமான நகரங்களுக்கு இந்த தொகையானது விடுவிக்கப்பட்டுள்ளது. அதிக பட்சமாக மராடிய மாநிலத்துக்கு மட்டும் 396.5 கோடியும், குறைந்தபட்சமாக அரியானா மாநிலத்திற்கு 24 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது.

இதில் தமிழகத்திற்கு மட்டும் மொத்தமாக ரூ.116.5 கோடி விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னைக்கு ரூ.90.5 கோடியும், மதுரைக்கு ரூ.15.5 கோடியும், திருச்சிக்கு ரூ.10.5 கோடியும் விடுவிக்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.