டெல்லியில் இதுவரை இல்லாத அளவாக இன்று கொரோனா பாதிப்பு உயர்வு
டெல்லியில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தொற்று பல்வேறு மாநிலங்களில் குறைந்து வருகிறது. ஆனால், தலைநகர் டெல்லி உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது. டெல்லியில் இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 725- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்தை தாண்டி பதிவாவது இதுதான் முதல் தடவையாகும். இதற்கு முன்பு கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி 5,891- பேருக்கு தொற்று பாதிப்பு பதிவானதே அதிகபட்சமாக இருந்தது. டெல்லியில் கொரோனா பாதிப்பை கண்டறிய இன்று ஒரே நாளில் 44 ஆயிரத்து 623 மாதிரிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story