அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட விதி மீறல் இல்லை - மராட்டிய அரசு
அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட விதி மீறல் எதுவும் இல்லை என மராட்டிய அரசு தெரிவித்துள்ளது.
மும்பை,
கட்டிட உள்வடிவமைப்பாளர் ஒருவர் 2018 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு அர்னாப்தான் காரணம் என்று தற்கொலை செய்து கொண்டவரின் மகள் புகார் அளித்தார். இந்த வழக்கில் பிரபல தனியார் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டார். அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட விதி மீறல் எதுவும் இல்லை என மராட்டிய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஸ்முக்,
“அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்ட விவகாரத்தில் யாரும் சட்டத்தை மீறவில்லை. தற்கொலை செய்து கொண்ட கட்டட வடிவமைப்பாளரின் மனைவி, நீதிமன்றத்தை அணுகிய பின்னரே வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.
Related Tags :
Next Story