மராட்டியத்தில் தியேட்டர்களை திறக்க மாநில அரசு அனுமதி
மராட்டியத்தில் நாளை முதல் தியேட்டர்களை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மும்பை,
நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் முதலிடம் வகிக்கும் மராட்டியத்தில், கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தொற்று பரவல் குறைந்து வரும் சூழலில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மராட்டிய மாநிலத்தில் நாளை முதல் தியேட்டர்களை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. 50 சதவித இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்பன போன்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளும் தியேட்டர்களுக்கு வகுக்கப்பட்டுள்ளன.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு இந்த அனுமதி பொருந்தாது என மராட்டிய அரசு தெரிவித்துள்ளது. மேலும், தியேட்டர்களுக்குள் தின்பண்டங்கள் விற்பனை செய்ய அனுமதி இல்லை எனவும் அரசு தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story