மராட்டியத்தில் இன்று மேலும் 5,505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மராட்டியத்தில் இன்று மேலும் 5,505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
நாட்டிலேயே மராட்டியம் தான் கொரோனா நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. கொடிய வைரசுக்கு இறந்தவர்கள் எண்ணிக்கையிலும் மராட்டியம் முதலிடம் வகிக்கிறது. ஆனால் சமீப நாட்களாக கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்த நிலையில், மராட்டிய மாநில சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மராட்டியத்தில் மேலும் 5,505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,98,198 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் மாநிலத்தில் 125 பேர் கொரோனாவால் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 44,548 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 8,728 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து இதுவரை 15,40,005 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,12,912 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story