கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடி


கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி வாக்களிக்க வேண்டும்:  பிரதமர் மோடி
x
தினத்தந்தி 7 Nov 2020 8:51 AM IST (Updated: 7 Nov 2020 9:03 AM IST)
t-max-icont-min-icon

பீகாரில் 19 மாவட்டங்களில் அடங்கியுள்ள 78 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி, 

பீகாரில் மாநில சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதல் கட்ட தேர்தல் கடந்த மாதம் 28-ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த 3-ம் தேதியும் நடைபெற்றது. இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மூன்றாம் கட்ட தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்கும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:- “

இன்று நடைபெறும் ஜனநாயக திருவிழாவில் அதிக எண்ணிக்கையில் வாக்காளர்கள் பங்கேற்று  வாக்களிக்க வேண்டும்.  இருப்பினும், முக கவசங்களை அணிந்துகொள்வதும் சமூக இடைவெளியை பராமரிப்பதும் அவசியம்’ என தெரிவித்துள்ளார்.

Next Story