கேரள ஆளுநருக்கு கொரோனா தொற்று பாதிப்பு


கேரள ஆளுநருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
x
தினத்தந்தி 7 Nov 2020 1:09 PM IST (Updated: 7 Nov 2020 1:09 PM IST)
t-max-icont-min-icon

கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

திருவனந்தபுரம், 

கேரளாவில் கொரோனா தொற்று கடந்த சில வாரங்களாக உச்சத்தில் உள்ளது. கேரளாவில் நேற்று ஒருநாளில் மட்டும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மராட்டியம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரளாவில் தொற்று வேகமாக பரவி வருகிறது. 

இந்த நிலையில், கேரள ஆளுநர் ஆரிப் முகம்மது கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை ஆளுநர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

கேரள ஆளுநர் கூறியிருப்பதாவது:- ” எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், அச்சப்படுவதற்கு எதுவும் இல்லை. டெல்லியில் கடந்த வாரம் என்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்”  என்று தெரிவித்துள்ளார்.

Next Story