பீகார் சட்டசபை தேர்தல்; மதியம் 1 மணி நிலவரப்படி 34.82 சதவீத வாக்குகள் பதிவு


பீகார் சட்டசபை தேர்தல்; மதியம் 1 மணி நிலவரப்படி 34.82 சதவீத வாக்குகள் பதிவு
x
தினத்தந்தி 7 Nov 2020 2:32 PM IST (Updated: 7 Nov 2020 2:32 PM IST)
t-max-icont-min-icon

பீகார் சட்டசபை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 34.82 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

பாட்னா,

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடந்து வருகிறது.  இதன்படி, முதல் கட்ட தேர்தல் கடந்த அக்டோபர் 28-ந் தேதியும், 2-ம் கட்ட தேர்தல் கடந்த 3-ந் தேதியும் நடந்து முடிந்தது.  3-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது.  வாக்கு எண்ணிக்கை 10-ந் தேதி நடக்கிறது.

78 தொகுதிகளுக்கு நடைபெறும் இந்த 3-வது கட்ட தேர்தல் ஆனது, வடகிழக்கு பீகாரின் சீமாஞ்சல் பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடைபெறுகிறது.

தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன.  பீகார் சட்டசபை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 34.82 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

71 உறுப்பினர்களுக்கான முதற்கட்ட தேர்தலில் 55.69 சதவீதமும், 94 உறுப்பினர்களுக்கான 2-வது கட்ட தேர்தலில் 53.51 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளன என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

Next Story