எல்லை கட்டுப்பாடு கோடு அருகே தாக்குதல்: வீரர் மரணம்; 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
எல்லை கட்டுப்பாடு கோடு அருகே நடந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்திய எல்லை கட்டுப்பாடு கோடு அருகே இந்திய நிலைகளை நோக்கி பயங்கரவாதிகள் இன்று மதியம் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து இந்திய தரப்பில் இருந்து பதிலடி தரப்பட்டது.
இதில், 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். இதனால் இந்திய எல்லை பகுதியில் பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story