உலக நாடுகளில் 2-வது அலை: ‘கொரோனாவை மக்கள் எளிதாக எடுத்து கொள்ளக்கூடாது’- உத்தவ் தாக்கரே
உலகளாவிய நிலைமையைப் பார்த்தால், பல நாடுகள் இப்போது 2-வது அலையை எதிர்கொள்கின்றன என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பை,
தானே மாவட்டம் மிரா பயந்தர் டவுன்ஷிப்பில் நgடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேசியதாவது:-
நமது மாநிலத்தில் கொரோனா வைரஸ் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருந்தாலும், தொற்றுநோய் இன்னும் முடிவடையவில்லை. உலகளாவிய நிலைமையைப் பார்த்தால், பல நாடுகள் இப்போது 2-வது அலையை எதிர்கொள்கின்றன.
எனவே, மக்கள் கொரோனா பிரச்சினையை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவர்கள் அனைத்து வழிகாட்டுதல்களையும், விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். 2-வது அலை நம்மை தாக்காது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
தொற்றுநோய் தொடங்கியபோது, மாநிலத்தில் 3 சோதனை ஆய்வகங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் அந்த ஆய்வகங்களின் எண்ணிக்கை இப்போது மாநிலத்தில் சுமார் 500 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான படுக்கைகளின் எண்ணிக்கை தொடக்கத்தில் சுமார் 4 ஆயிரத்தில் இருந்து தற்போது 3 லட்சத்து 75 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story