உ.பி.: ஹத்ராசில் 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்; 2 பேர் பலி


உ.பி.:  ஹத்ராசில் 8 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்; 2 பேர் பலி
x
தினத்தந்தி 9 Nov 2020 8:53 AM GMT (Updated: 9 Nov 2020 8:53 AM GMT)

உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் நகரில் 8 வாகனங்கள் அடுத்தடுத்து இன்று மோதி கொண்ட விபத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர்.

ஹத்ராஸ்,

உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் நகரில் யமுனா விரைவுசாலையில் இன்று காலை 7.15 மணியளவில் 7 முதல் 8 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றோடு ஒன்றாக மோதி விபத்திற்குள்ளாகின.

இந்த சம்பவத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர்.  பலர் காயமடைந்தனர்.  அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  அதிக அடர்பனியால் இந்த விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என கூறப்படுகிறது.

இதுபற்றி ஹத்ராஸ் போலீஸ் சூப்பிரெண்டு வினீத் ஜெய்ஸ்வால் தலைமையிலான போலீசார் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story