கொரோனா வைரசை தடுப்பதில் 90% பலன்; அமெரிக்க, ஜெர்மனி மருந்து நிறுவனங்கள் அறிவிப்பு


கொரோனா வைரசை தடுப்பதில் 90% பலன்; அமெரிக்க, ஜெர்மனி மருந்து நிறுவனங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 9 Nov 2020 6:59 PM IST (Updated: 9 Nov 2020 6:59 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரசை தடுப்பதில் எங்களுடைய மருந்துகளால் 90% பலன் கிடைத்துள்ளது என்று அமெரிக்க, ஜெர்மனி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

புதுடெல்லி,

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளால் 12 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர்.  ஏறக்குறைய 8 மாதங்களுக்கு மேலாக இந்த நூற்றாண்டில் கோடிக்கணக்கானோரை பாதித்துள்ள வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள பிஜெர் என்ற மருந்து நிறுவனமும், ஜெர்மனியின் பையோஎன்டெக் மருந்து நிறுவனமும் எங்களுடைய மருந்து கொரோனா வைரசை தடுப்பதில் 90% பலன் கிடைத்துள்ளது என அறிவித்து உள்ளது.

இதுபற்றி ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களிடம் நிறுவனங்கள் ஆய்வு நடத்தி உள்ளன.  இதில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.  எங்களால் 130 கோடி டோஸ் மருந்து உற்பத்தி செய்ய முடியும் என இந்நிறுவனங்கள் அறிவித்து உள்ளன.

இந்த தடுப்பு மருந்துகளை வரும் 2021ம் ஆண்டு இறுதி வரை 65 கோடி மக்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும்.  இதேபோன்று ஜான்சன் அண்டு ஜான்சன், அஸ்திரா ஜெனிகா உள்ளிட்ட மருந்து நிறுவனங்களும் தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் ஈடுபட்டு உள்ளன.

Next Story