டெல்லியில் இன்று மேலும் 5,023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


டெல்லியில் இன்று மேலும் 5,023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 10 Nov 2020 12:17 AM IST (Updated: 10 Nov 2020 12:17 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் இன்று மேலும் 5,023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று மேலும் 5,023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,43,552  ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் மாநிலத்தில் 71 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  7,060  ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 7,014  பேர் குணமடைந்துள்ளனர்.   இதனால் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,96,697 ஆக உயர்ந்துள்ளது.  டெல்லியில் தற்போது வரை  39,795 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
1 More update

Next Story