விவகாரத்து கொடுத்து கணவரை அவரது காதலியுடன் சேர்த்து வைத்த மனைவி


விவகாரத்து கொடுத்து கணவரை அவரது காதலியுடன் சேர்த்து வைத்த மனைவி
x
தினத்தந்தி 10 Nov 2020 3:47 PM IST (Updated: 10 Nov 2020 3:47 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் திருமணமான 3 வருடம் கழித்து மனைவி அவரது கணவரை காதலியுடன் சேர்த்து வைத்து உள்ளார் மனைவி

போபால்

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் திருமணமான மூன்று வருடங்களுக்கு பிறகு தன் கணவனுக்கு விவாகரத்து கொடுத்து, அவரின் காதலியை திருமணம் செய்துகொள்ள உதவியுள்ளார் ஒரு பெண்.

மத்திய பிரதேசத்தில் நடந்த  ஒரு வினோதமான வழக்கில், திருமணமான மூன்று வருடங்களுக்கு பிறகு தனது கணவரை அவரின் காதலியுடன் சேர்த்துவைப்பதற்காக, அவரை விவாகரத்து செய்துள்ளார்.

இது குறித்து பேசிய இவ்வழக்கின் வழக்கறிஞர் அந்த நபர் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெறாமலேயெ தனது காதலியுடன் திருமணம் செய்து கொள்ள விரும்பினார், இது சட்டப்படி சாத்தியமில்லை. ஆனால் அவரின் மனைவி மிகவும் முதிர்ச்சியடைந்தவர், அவர் தனது கணவனை அவரின் காதலியுடன் சேர்த்து வைப்பதற்காக அவரை விவாகரத்து செய்து அவரது காதலியை திருமணம் செய்ய உதவினார் என்று கூறினார்.


Next Story