இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றை விட சற்று அதிகரிப்பு


இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றை விட சற்று அதிகரிப்பு
x
தினத்தந்தி 11 Nov 2020 4:31 AM GMT (Updated: 11 Nov 2020 4:31 AM GMT)

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றை விட 16 சதவீதம் உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு அதன் பிறகு படிப்படியாக குறைந்து வருகிறது.  கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வந்தாலும் சில தினங்களில் அதிகமாகவும் பதிவாகி வருகிறது. கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக பதிவாகி வருவதால், தொற்று பாதிப்பு கணிசமாக  குறையவில்லை.

 கொரோனா பாதிப்பு நேற்றை விட சற்று அதிகரித்துள்ளது. நேற்று 38 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகி இருந்த நிலையில், இன்று 16 சதவீதம் உயர்ந்து 44,281 - ஆக தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 86 லட்சத்து 36 ஆயிரத்து 012- ஆக உயர்ந்துள்ளது.  

தொற்று பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 512- பேர் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 571- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் 4 லட்சத்து 94 ஆயிரத்து 657 - பேர் சிகிச்சையில் உள்ளனர்.  இந்தியாவில் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 லட்சத்து 94 ஆயிரமாக உள்ளது. 

Next Story