கிழக்கு லடாக்கில் நிலைமை கட்டுக்குள் உள்ளது, நிலைமை மேலும் மேம்படும்- இந்திய ராணுவ தலைமை தளபதி
கிழக்கு லடாக்கில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. நிலைமை மேலும் மேம்படும் என நம்புவதாக இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவனே கூறினார்.
புதுடெல்லி:
பாதுகாப்பு மற்றும் இராணுவப் பிரச்சினைகள் குறித்த இணையதளமான ‘பாரதசக்தி’ ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவனே கூறியதாவது:-
இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த மூத்த ராணுவத் தளபதிகள் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனர்.
பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உடன்பாட்டை எட்டுவோம் என்று நாங்கள் நம்புகிறோம், கொள்கை வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தற்போது இப்பகுதியில் நிலைமை மிகவும் கட்டுக்குள் உள்ளது. நிலைமை மேலும் மேம்படும்,உயரமான பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய துருப்புக்கள் குறித்து கருத்து தெரிவித்த நரவனே,குளிர்காலத்தில் படையினருக்கு பொருத்தமான ஆடை மற்றும் ஆயுதங்கள் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் இதில் எந்த பற்றாக்குறையும் இல்லை கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை எட்டாவது சுற்று ராணுவ தளபதிகள் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இந்திய இராணுவம் மற்றும் சீன இராணுவம் (பி.எல்.ஏ) வெளியிட்ட ஒரு கூட்டு அறிக்கையில் பேச்சுவார்த்தைகள் நேர்மையாகவும், ஆழமாக மற்றும் ஆக்கபூர்வமானவையாக இருந்தது. இரு நாடுகளின் தலைவர்களும் எட்டிய முக்கியமான ஒருமித்த கருத்தை செயல்படுத்தவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டனர்.
இந்தியாவும் சீனாவும் அடுத்த கட்டத்திற்கு ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் ஆர்வமாக உள்ளன.
Related Tags :
Next Story