ரஷியாவின் ஸ்புட்னிக் 5 கொரோனா தடுப்பூசி 92 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும்..!!


ரஷியாவின் ஸ்புட்னிக் 5 கொரோனா தடுப்பூசி 92 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும்..!!
x
தினத்தந்தி 11 Nov 2020 4:19 PM IST (Updated: 11 Nov 2020 4:19 PM IST)
t-max-icont-min-icon

ஸ்புட்னிக் 5 கொரோனா தடுப்பூசி 92 சதவீதம் பயனுள்ளதாக இருபபதாக ரஷ்யா தெரிவித்துள்ளது

மாஸ்கோ

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசியை உலக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், ரஷியா உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கி, பதிவு செய்து இருப்பதாக அந்த நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் ஆகஸ்ட் மாதம் 11-ந் தேதி அறிவித்து உலகை பரபரப்பில் ஆழ்த்தினார்.

இந்தநிலையில்,  ரஷிய பாதுகாப்பு அமைச்சகமும், கமலேயா தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் அறிவியல் ஆராச்சி நிறுவனமும் இணைந்து உருவாக்கி உள்ள இந்த தடுப்பூசிக்கு ‘ஸ்புட்னிக்-5’ என பெயரிடப்பட்டுள்ளது. 

ரஷியாவால் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பூசி, இந்தியாவில் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், இந்த பரிசோதனை பணியில், மருத்துவ உலகில் முன்னணி நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் கைகோர்த்துள்ளது.

இந்தியாவில் நடக்கும் ஸ்புட்னிக்-5 மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில் ரஷியாவின் ஸ்பூட்னிக் 5 தடுப்பூசி இடைக்கால சோதனை முடிவுகளின்படி, கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் 92 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்று நாட்டின்  செல்வ நிதியம் புதன்கிழமை கூறி உள்ளது.

செப்டம்பரில் பெரிய அளவிலான சோதனை தொடங்குவதற்கு முன்பே ஒப்புதல் வந்த போதிலும், ரஷியா ஸ்பட்னிக் 5யை ஆகஸ்ட் மாதத்தில் பொது பயன்பாட்டிற்காக பதிவு செய்தது.

கமலேயா நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனை மாஸ்கோ முழுவதும் 29 மருத்துவமனைகளில் நடைபெற்று வருகிறது.


Next Story