உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் தேர்தல்களில் போட்டியிட முடிவு - ஒவைசி


உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் தேர்தல்களில் போட்டியிட முடிவு - ஒவைசி
x
தினத்தந்தி 11 Nov 2020 12:03 PM GMT (Updated: 11 Nov 2020 12:03 PM GMT)

பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அளித்த ஊக்கத்தையடுத்து, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் தேர்தல்களிலும் போட்டியிட திட்டமிட்டு வருவதாக அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்,

பீகார் சட்டசபை தேர்தலில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளபகுதியில் உள்ள 5 இடங்களை ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். என்ற முஸ்லிம் கட்சி (அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹாத் உல் முஸ்லிமின்) கைப்பற்றியது. பீகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் ஊக்கத்தை அளித்துள்ளதாக அக்கட்சி தரப்பில் கூறப்படுகிறது. 

பீகார் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை ஏ.ஐ.எம்.ஐ.எம். பிரித்ததாக எழும் விமரிசனங்கள் குறித்து   அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பப்பட்டது.

இது குறித்து ஒவைசி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பீகாரில் தனது கட்சி நீதிக்காக போராடும்.  பீகார் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை ஏ.ஐ.எம்.ஐ.எம். பிரித்ததாக எழும் விமரிசனங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

நான் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று கூறுகிறீர்களா. மராட்டியத்தில் சிவசேனாவின் மடியில் அமர்ந்தது காங்கிரஸ்.

மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் மற்றும் நாட்டின் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவேன். தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் யார் அனுமதியைப் பெற வேண்டும்.

ஏ.ஐ.எம்.ஐ.எம். 2022 உத்தரப் பிரதேச தேர்தலிலும் போட்டியிடும். யாருடன் கூட்டணி என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.

அதீர் ரஞ்சன் சௌதரியின் சொந்த தொகுதியில் முஸ்லிம்களின் நிலைமை ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதற்கு அவர் பதிலளிக்க வேண்டும். முஸ்லிம்களுக்காக அவர் என்ன செய்தார் என்பதைத் தெரிவிக்க வேண்டும். ஏ.ஐ.எம்.ஐ.எம். மேற்கு வங்க தேர்தலிலும் போட்டியிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story