மேற்கு வங்காளத்தில் 10 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது - ம‌ம்தா பானர்ஜி


மேற்கு வங்காளத்தில் 10 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது - ம‌ம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 11 Nov 2020 12:32 PM GMT (Updated: 11 Nov 2020 12:32 PM GMT)

மேற்கு வங்காளத்தில் 10 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது என்று அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

கொல்கத்தா, 

நாட்டில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் முழுவதுமாக முடக்கப்பட்டிருந்தது. தொற்று பரவல் குறையத்தொடங்கியதும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது.

இதனிடையே மேற்கு வங்காளத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை விட, குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களை படிப்படியாக மீண்டும் திறக்க மத்திய கல்வி அமைச்சகம் அனுமதித்த போதிலும், கொரோனாவால் பள்ளிகள் முழுமையாக திறக்கப்படாத சூழ்நிலை அங்கு நிலவுகிறது.

இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் 10 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது என்று அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

இதன்படி மேற்கு வங்காளத்தில் நடப்பாண்டு (2020-2021) 10 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு கிடையாது என்றும், அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவர் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து நவம்பர் மத்தியில் முடிவு எடுக்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.

Next Story