நோட்டாவுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் - பீகாரில் அரசியல் கட்சிகள் அதிர்ச்சி
பீகார் தேர்தலில் நோட்டாவுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளது அரசியல் கட்சிகளை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
புதுடெல்லி,
பீகார் தேர்தல் புள்ளிவிவரங்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதன்படி பீகாரில் நடந்த 3 கட்ட தேர்தலில் 4 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்கு அளித்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி உள்ளனர். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7.3 கோடி ஆகும்.
பீகார் சட்டசபை தேர்தலில், எந்த வேட்பாளருக்கும் வாக்கு அளிக்க விருப்பம் இல்லை என்பதை வாக்காளர்கள் தெரிவிக்கும் வகையில் நோட்டாவுக்கு 7 லட்சத்து 6 ஆயிரத்து 252 வாக்குகள் விழுந்துள்ளன. இது 1.7 சதவீதம் ஆகும். பல தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றி வித்தியாசத்தை விட நோட்டா வுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த தகவல் அரசியல் கட்சிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
Related Tags :
Next Story