மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,856 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,856 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா,
மேற்குவங்க மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,856 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,20,840 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் இன்று மேலும் 54 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 7,506 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது 32,185 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று அதிகபட்சமாக 4,453 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளநிலையில், இதுவரை 3,81,149 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story